Description
தேவைக்கு அதிகமாகவே செலவு செய்கிறோம் என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் நம்மால் செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செலவைக் குறைத்தால் எங்கே நாம் இன்றுவரை அனுபவித்துவரும் வசதிகளை இழந்து விடுவோமோ? நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டியிருக்குமோ? என்றெல்லாம் பயப்படுகிறோம்.நம்முடைய பயத்தையும் சந்தேகத்தையும் துடைத்தெறிந்து பணத்தைச் சேமிக்க வழிகாட்டுகிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர்.நாம் வாழ்க்கையில் இதுவரை அனுபவிக்கும் எந்த சந்தோஷத்தையும் இழக்காமல், குறைவாகச் செலவு செய்வதன் மூலம் எப்படி சேமிக்கலாம் என்பதை தனது இயல்பான நகைச்சுவை கலந்த எளிய நடையில் வழிகாட்டுகிறார் டெம்ப்ளர்.நீங்கள் இப்போது எந்த நிலையில் இருந்தாலும் சரி, செலவைக் குறைத்து பணத்தை சேமிக்க உதவும் அற்புதமான, நூற்றுக்கும் மேற்பட்ட வழிகளை சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம். அனைவராலும் கடைப்பிடிக்கக்கூடிய எளிமையாக வழிகைளைக் கொண்ட இந்தப் புத்தகம் ஒவ்வொருவரிடமும் இருப்பது அவசியம்.