Description
·தன்னம்பிக்கையும் புதிதாகச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட பணியாளர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி தலைமைத் தாங்கி வழிநடத்துவது எப்படி?·நேர்மறை எண்ணமும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பணியாளர்களை ஒன்றிணைத்து, இலக்கினை அடைவது எப்படி?·உறுதியும் தெளிவும் கொண்ட தொலைநோக்குப் பார்வையுள்ள ஒரு தலைவனாக, பணியாளர்களை வழிநடத்துவது எப்படி?ஒரு நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் புத்தகம் இது. நூலாசிரியர், மார்த்தா ஃபின்னி பணியாளர் ஈடுபாடு, தலைமைத் தாங்குதல் போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். கருத்தரங்குகள், மாநாடுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசிவரும் இவர், பல முன்னணி நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக இருக்கிறார்.