வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை


Author:

Pages: 142

Year: 2010

Price:
Sale priceRs. 100.00

Description

‘நேர்மையான வழியில் பிசினஸ் செய்து வெற்றி பெறமுடியாது’, ‘ஒளிவு மறைவற்ற பிசினஸ் ஒப்பந்தங்கள்சாத்தியமேயில்லை’, ‘லஞ்சம் தராமல் பிசினஸில் காரியம் சாதிக்க முடியாது’ என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்படுகிறோம். நேர்மையான வழிகளில் பிசினஸில் சாதிக்கவே முடியாது என்ற அவநம்பிக்கையை உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம்.இந்த உலகில் இருக்கும் விளையாட்டுகளிலேயே மிகவும் சிறந்தது வாழ்வதுதான். அதை முக்கியமற்றதாக, லேசானதாக, விதிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லாத ஒன்றாக நினைக்கிறோம். அதில்தான் எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன. விதிமுறைகள் மிகவும் முக்கியமானவை. விதிகளுக்கு உட்பட்டுத்தான் விளையாட வேண்டும். இல்லையென்றால் அது விளையாட்டாகவே இருக்காது. வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு அல்ல. கண்ணியத்துடன் வெற்றி பெற வேண்டும். இது பிசினஸுக்கும் நன்கு பொருந்தும்.உண்மையாக நடந்து வெற்றி பெற முடியும், உச்சங்களைத் தொட முடியும் என்பதைத் தமது பிசினஸ் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் நிரூபிக்கிறார் ஜான் ஹண்ட்ஸ்மன். 1960களில் மிகச் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவனம் இன்று ஹண்ட்ஸ்மன் கார்ப்பரேஷன் என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப்பெரிய பிசினஸ் குழுமங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஊழல்களும் பித்தலாட்டங்களும் நிரம்பிய இன்றைய பிசினஸ் உலகில் நேர்மையான வழிகளைத் தேடுவோருக்குக் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.

You may also like

Recently viewed