Description
ஏன் செய்ய நினைக்கும் வேலைகளைச் செய்துமுடிக்க முடிவதில்லை?ஏன் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது?ஏன் செய்ய நினைத்த வேலைகளைச் செய்யாமல் விட்டுவிடுகிறோம் அல்லது மறந்துவிடுகிறோம்?ஏன் எவ்வளவு முயன்றும் தாமதத்தைத் தவிர்க்க முடிவதில்லை?எப்படி ஒரு சிலரால் மட்டும் அனைத்தையும் கச்சிதமாக செய்துமுடிக்க முடிகிறது?எப்படி ஒரு சிலரால் மட்டும் குறித்த நேரத்துக்குள் வேலைகளைச் செய்ய முடிகிறது?இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனத்திலும் எழுகின்றதா? தயங்காதீர்கள்! சரியான புத்தகத்தைத்தான் கையில் எடுத்திருக்கிறீர்கள். செய்ய நினைத்த காரியங்களைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும். நடைமுறைக்கு ஏற்ற எளிமையான 100 வழிகளைச் சொல்லித்தருகிறது ரிச்சர்ட் டெம்ப்ளர் எழுதிய ‘நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?’ என்ற இந்தப் புத்தகம்.