யோசனையை மாற்று


Author:

Pages: 192

Year: 2011

Price:
Sale priceRs. 150.00

Description

சிந்தனைத் திறமை என்பது எப்படிப்பட்டது? நம்முடைய தோலின் நிறத்தைப் போல் பிறக்கும்போதே தீர்மானமாகிவிடும் ஒன்றா... அதை மாற்றிக் கொள்ளவே முடியாதா? அல்லது நீச்சல், சமைத்தல், பாடுதல் போல் பயிற்சியின் மூலம் மேம்படுத்திக் கொள்ள முடிந்த ஒன்றா?சிந்தனைத் திறமையை மேம்படுத்த இந்தப் புத்தகத்தில் எளிய ஆனால் வலிமையான வழிமுறைகளை எட்வர்ட் டி போனோ தந்துள்ளார்.புரிதலைச் சரிசெய்வதன் மூலம் எப்படி சிந்தனையை மேம்படுத்தலாம்?எப்படித் தீர்மானங்கள் எடுப்பது?உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?முழு வீச்சில் சிந்திப்பது எப்படி?- என பல கோணங்களில் தெளிவாக விளக்கியுள்ளார்.சிந்தித்தல் என்பதை ஒரு கலையாகக் கற்றுக் கொடுப்பதில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர் எட்வர்ட் டி போனோ. ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் மூலம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர். ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். 60 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். சீனம், ஹீப்ரு, அராபி, பாஷா, கொரியா என 27 மொழிகளில் இவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தென் ஆஃப்ரிக்காவின் குக்கிராமங்களில் ஆரம்பித்து அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் வரை இவருடைய வழிமுறைகள் பெரும் உற்சாகத்துடன் படித்துப் பின்பற்றப்படுகின்றன.

You may also like

Recently viewed