நம்பர் 1 மார்க்கெட்டிங் (புத்தம் புது ஃபார்முலாக்கள்)


Author:

Pages: 184

Year: 2011

Price:
Sale priceRs. 150.00

Description

* தரமான உங்கள் தயாரிப்புகளில் பெரும்பாலானவை சுமாரான வெற்றியைத்தான் பெற்றிருக்கின்றனவா?* சில படு தோல்வி அடைந்துவிட்டனவா?* விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிவிட்டதா?* வாடிக்கையாளர்கள் உங்கள் பொருளில் திருப்தி அடைந்த பிறகும் வேறு நிறுவனத்துக்குத் தாவிடுகிறார்களா?மார்க்கெட்டிங் புத்தகங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறேன். நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் எதையும் செய்கிறேன். இருந்தும் நினைத்த வெற்றியைப் பெறவே முடியவில்லை என்கிறீர்களா. தவறு உங்கள் மீது இல்லை... உங்களுக்குச் சொல்லித்தரப்பட்ட மார்க்கெட்டிங் கோட்பாடுகளில்தான் அந்தக் குறை இருக்கிறது. தவறான வரைபடத்தை வைத்துக் கொண்டு கப்பலை ஓட்டிய மாலுமி போல் இருந்திருக்கிறீர்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மை அதுதான். மார்க்கெட்டிங் தொடர்பாக நீங்கள் இதுவரை என்னவெல்லாம் சரி என்று நினைத்தீர்களோ அவை எல்லாமே தப்பு என்பதை இந்தப் புத்தகம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.மனிதர்களுக்கு இரண்டு மனங்கள் உண்டு. ஒன்று பிரக்ஞைபூர்வ மனம். இன்னொன்று ஆழ் மனம். இதுவரையில் வெளியாகியிருக்கும் அனைத்து மார்க்கெட்டிங் கோட்பாடுகளும் புத்தகங்களும் பிரக்ஞைபூர்வ மனத்தை மட்டுமே குறிவைத்து வந்திருக்கின்றன. ஆனால், நீங்கள் ஒரு பொருளை வாங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதோ உங்கள் ஆழ் மனம்தான்! இந்த அரிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் பழைய மார்க்கெட்டிங் விதிகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு புத்தம் புதிய, 100% வெற்றியைத் தரக்கூடிய வழிமுறைகளை இந்த நூல் உங்களுக்குக் கற்றுத் தருகிறது.இதுவரை எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் பெறாமல் இருந்ததற்கு இதுவரை நீங்கள் படித்த புத்தகங்கள்தான் காரணம். இனிமேல் நீங்கள் பெறப் போகும் வெற்றிக்கு இனிமேல் நீங்கள் படிக்கும் இந்தப் புத்தகமே காரணமாக இருக்கப் போகிறது.

You may also like

Recently viewed