Description
கற்றவர்களுக்கு மட்டுமல்ல, கவர்ந்து இழுக்கத் தெரிந்தவர்களுக்கும், சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறது.அரசியல் தொடங்கி அறிவியல் வரை, எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், பளிச்சிடும் இந்த மேக்னட் மனிதர்களைக் காணமுடியும். ஒத்த கருத்துள்ளவர்களை மட்டுமல்ல, மாறுபட்டவர்களையும்கூட இவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்துக்கொண்டுவிடுவார்கள்.இந்த வசீகரத்தை மட்டும் பெற்றுவிட்டால், நம் செல்வாக்கும் மதிப்பும் பெருகும். நம் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், உலகம் நம் கைப்பிடிக்குள்.வசீகரம் வாய்த்துவிட்டால், தன்னம்பிக்கையும் துணிச்சலும் செயல்திறனும் தானாகவே வந்துவிடும். இந்தப் புத்தகம், உங்கள் திறமைகளையும், ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து, பரஸ்பர நேச உணர்வையும், நீடித்து நிலைக்கக்கூடிய உறவுகளையும் பேண வழிகாட்டுகிறது.

