Description
* காதல் கைகூடவேண்டுமா?* கனவுகள் மெய்ப்படவேண்டுமா?* நீங்கள் விரும்பும் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டுமா?* பதவி உயர்வு, கூடுதல் சம்பளம், கூடுதல் பொறுப்பு அனைத்தும் வேண்டுமா?* ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? நோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா?உங்களுக்கு ஒரு நல்ல செய்தி: இரண்டே வார்த்தைகளில் உங்கள் தேடல் முடிவுறும். ‘கேளுங்கள்... கிடைக்கும்’ என்பதே அது.மிகச் சாதாரணமாகத் தோன்றும் இந்த வழிமுறையைப் பல நேரம் மறந்துவிடுகிறோம். இந்த இரண்டு வார்த்தைகள் எப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.மனித இனம் இன்று இவ்வளவு உயரிய சாதனைகளைப் படைத்திருப்-பதற்கு அடிப்படையான காரணம் கேள்வி கேட்கும் இயல்புதான்.கேள்வி கேட்பதில் இருக்கும் நுட்பத்தையும் துணிந்து கேட்பது தொடர்-பான முக்கிய விதிகளையும் துணிந்து கேட்கும் மனோ-பாவத்தையும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இவை மிகச் சாதாரணமான, சாதுர்யமான உத்திகளே. கடந்த இருபது வருடங்களில் இவற்றைப் பின்பற்றிப் பயனடைந்-தோர் ஏராளம். நீங்களும் இவற்றை உபயோகப்படுத்தி எளிதில் வெற்றி பெறலாம்.