சீனாவும் சீன மக்களும்


Author: லின் யூடாங், தமிழில்-க. பூரணச்சந்திரன், சுப. நாராயணன், வே.ராமசாமி

Pages: 608

Year: 2025

Price:
Sale priceRs. 600.00

Description

'சீனாவும் சீன மக்களும்’ என்னும் இந்தச் செவ்வியல் புத்தகம் ‘மை கண்ட்ரி மை பீப்பிள்’ ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆகும். *** பண்பாட்டு விழிப்புணர்வுடன் இருப்பது, உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் மிகவும் பொருத்தமான தொடர்புகளைப் பெற அனுமதிக்கிறது. பரப்பளவில் உலகில் மூன்றாவது பெரிய நாடு சீனா. இந்தப் புத்தகத்தில் லின் யூடாங், சீனாவைப் பற்றியும் சீன மக்கள், அவர்களின் தொன்மை, பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கை போன்றவை குறித்தும் பிற நாட்டினருக்குப் புரியும் வகையில் விவரிக்கும் ஓர் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். இதில் சீனர்களின் தோற்றம், நடத்தை, இலட்சியங்கள், மதம், பெண்களின் நிலை, சமூக-அரசியல், இலக்கியம், கலை எனச் சீனர்களின் வாழ்க்கையைப் பற்றிய தனித்துவமான நுண்ணறிவை ஆர்வமூட்டும் பல தலைப்புகளில் விவரிக்கிறார். இதனால்தான் இந்தப் புத்தகம் சீனாவைப் பற்றிய நூல்களுள் காலம் கடந்த ஒரு செவ்வியல் படைப்பாக இன்றும் நிலைத்திருக்கிறது. *** திடீரென்று, எல்லாப் பெரிய நூல்களும் தோன்றுகின்றன; தன்மீது வைக்கப்படும் எல்லாத் தேவையையும் நிறைவேற்றியவாறு இந்தப் புத்தகமும் தோன்றுகிறது. அது உண்மையாக உள்ளது; மெய்ம்மையைச் சொல்வது பற்றி வெட்கப்படவில்லை: அது பெருமிதமாகவும் நகைச்சுவையாகவும், அழகுடனும் அக்கறையுடனும், துள்ளல் மிகுந்து பழையவை, புதியவை ஆகிய இரண்டையும் பாராட்டும் முறையிலும், புரிந்துகொள்ளும் வகையிலும் எழுதப்பட்டிருக்கிறது. இதுதான் சீனாவைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட நூல்களில் மிகவும் முக்கியமானது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதை எழுதியவர் ஒரு சீனர், நவீனத்தன்மை கொண்டவர், அவருடைய வேர்கள் கடந்த காலத்தில் நிலைகொண்டுள்ளன; ஆனால் அதன் வளமான அரும்புகள் நிகழ்காலத்தில் மலர்கின்றன. - பேர்ல் எஸ். பக் (இந்த நூலின் அறிமுகத்தில்)

You may also like

Recently viewed