Description
வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம்... தக்கோலம் என்னும்
கிராமத்தில் பிறந்து, படித்து, வளர்ந்து, திரு. கவிஞர் கண்ணதாசன்,
பெரியவர் இராமமூர்த்தி மற்றும் பல படைப்பாளிகளின்
எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சிறிய சிறிய படைப்புகளாக எழுத
ஆரம்பித்து, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைஞர்
கருணாநிதி அவர்களின் அபரீதமான திறமைகளால் தாக்கம்
ஏற்பட்டு, சினிமாத் துறையில் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடி
அலைந்து, பிறகு வாய்ப்புக் கிடைத்து (கொடுத்து) இயக்குநர்களிடம்
பணியாற்றி இணை இயக்குநராக வளர்ந்து, (திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சித் தொடர்கள்) பின்பு, எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட்டு, ஹன்ஸா
விஷன், ராடான், மின்பிம்பங்கள், பாலாஜி டெலிபிலிம்ஸ், ஏ.வி.எம்., ராஜ் வீடியோ விஷன்
மற்றும் ஆந்திராவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்து, இன்று தமிழ்நாடு
சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் சோழர்களின் வீரம், பக்தி, போர், எதிரிகள், வாழ்வியல் முறைகள், அரசாண்ட
திறன்கள், ஏற்படுத்திக் கொடுத்த நீர்நிலை அணைகள் போன்ற பல அருமை வாய்ந்த
விஷயங்களைக் கூறும் இந்தப் "பேசும் வரலாறு” புத்தகத்தினை எழுதி முடித்திருக்கிறார்.
இவரது இந்த முயற்சி வெற்றியடைய இறையருள் துணை நிற்கட்டும்.