Description
‘எவ்வளவு அழகான தலைப்பு! எவ்வளவு அருமையான எழுத்துகள்!’ என்று ஆதவனின் இந்நூலை வியக்கிறார் வண்ணதாசன்.
‘ஒரு மனிதனாகவும் ஒரு எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட (ஆதவன்) என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை’ என்கிறார் அசோகமித்திரன்.
இளம் தலைமுறையினரின் சுயம் தேடும் பிரயத்தனங்களை, உள்மனப் போராட்டங்களை, ஏக்கங்களை, கனவுகளை, பாலுணர்வு சார்ந்த சிக்கல்களைப் பரிவோடு அணுகும் ஆறு குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஆதவனின் படைப்புலகில் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.