Description
நவீன இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவர் காமராஜர். தமிழகத்தின் முகம் என்றும், தமிழர்களின் பெருமிதத்துக்குரிய அடையாளம் என்றும் அவரை அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். அரசியல் களத்தில் செயல்பட்டஒருவர் காலம் கடந்தும் இவ்வாறு போற்றப்படுவது உண்மையிலேயே அபூர்வமானது.கனிவும் பண்பும் அசாத்தியக் குணங்களும் கொண்ட ஒரு தலைவராக,அப்பழுக்கற்ற ஓர் அரசியல்வாதியாக, மென் இதயம் கொண்ட ஒருமனிதராக அவர் இருந்திருக்கிறார். தமிழகம் சந்தித்த தலைசிறந்த முதல்வர் என்று நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் நம்மோடு சேர்ந்து சொல்லும்.
நாகூர் ரூமியின் இந்நூல் காமராஜரை எளிமையாகவும் சுவையாகவும்
அறிமுகம் செய்கிறது.தமிழகத்தில் அவர்
சீர்திருத்தங்களில் தொடங்கி தேசிய அளவில் அவர் ஏற்படுத்தியமாற்றங்கள் வரை அனைத்தும் இதில் உள்ளன. காமராஜரின் வாழ்வை அவர் காலத்து அரசியல் வரலாற்றில் பொருத்தி நுணுக்கமாக ஆராய்கிறார் ரூமி.