கிரேசி மோகன்(combo offer)

Save 10%

Author: கிரேசி மோகன்

Pages: 429

Year: 2006

Price:
Sale priceRs. 450.00 Regular priceRs. 500.00

Description

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன்

கிரேஸியின் எழுத்தில் அட்டகாசமாக சிரிப்பு வரும் என்று நான் சொல்வது ஏ.ஸி. போட்டால் ஜில்லேன்று இருக்கும் என்று சொல்வதைப் போல!
அட்லீஸ்ஙட இரண்டு பக்கத்துக்கு ஒருமுறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படிச் சிரித்தேன்.


தமிழக வரலாற்றில் யாருக்குத் தெரியாமல் ஒரு நகைச்சுவை மன்னன் வாழ்ந்து ஆட்சிபுரிந்திருக்கிறான் என்பதைப் பல கற்சுவடுகளையும் மட்கிப்போயிருந்த ஓலைச் சுவடிவடுகளையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து படித்து(!) இப்புத்தகம் எழுதியகிரேஸிமோகனுக்குத் தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது

அமெரிக்காவில் கிச்சா

நாடக மேடை, பத்திரிகை, எழுத்து, சினிமா என்று எதை எடுத்தாலும் சும்மா ‘நச்’னு நகைச்சுவை முத்திரை பதிப்பதில் கிரேஸி கில்லாடி!

மயிலாப்பூரில் உட்கார்ந்துகொண்டு தன் கேரக்டர் கிச்சாவை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். அவன் செய்யும் ரகளை எல்லாம் வாயும் வயிறும் தெறிக்குமளவுக்குச் சிரிப்பு வெடி.

‘அட்லீஸ்ட் இரண்டு பக்கத்துக்கு ஒரு முறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தேன்’ என்று கார்ட்டூனிஸ்ட் மதன், கிரேஸி மோகனின் முந்தைய நூலான சிரிப்புராஜ சோழனைப் படித்துவிட்டு குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சற்றும் குறையாமல் துவம்சம் பண்ணியிருக்கிறான் அமெரிக்காவில் கிச்சா!

மிஸ்டர் சிச்சா

தமிழர்களைச் சிரிக்க வைப்பது என்பது ஒரு நுண்கலை. சாலை மறியல்களையும் அரசியல் கூட்டங்களையும் மழைப் பற்றாக்குறையையும் மெகா சீரியல்களையும் பார்த்து நொந்து போயிருக்கும் ஜனங்களைச் சிரிக்க வைக்க கிரேஸி மோகன் போன்ற எழுத்தாளர்கள் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்மையாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகை கலாசாரத்தின், விளம்பரயுகத்தின் தாக்குதலால் எதையுமே இரண்டிலிருந்து பத்து மடங்காக்கி சொன்னால்தான் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு ஏற்ப கிரேஸி மோகனின் கட்டுரை நாயகனான கிச்சாவும் எச்சுமிப்பாட்டியும் மிகையான பல காரியங்கள் செய்கிறார்கள். வேர்ல்ட் கப்பில் இந்தியாவுக்குக் கூட ஆடுகிறார்கள்!

இவற்றைப் படித்துவிட்டு உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் போன ஜென்மத்தில் உங்களை ஒரு மூன்றெழுத்து வார்த்தையால்தான் வகைப்படுத்த முடியும்.

You may also like

Recently viewed