Description
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று என்று பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார். எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம்.