Description
நாடக மேடை, பத்திரிகை, எழுத்து, சினிமா என்று எதை எடுத்தாலும் சும்மா ‘நச்’னு நகைச்சுவை முத்திரை பதிப்பதில் கிரேஸி கில்லாடி!
மயிலாப்பூரில் உட்கார்ந்துகொண்டு தன் கேரக்டர் கிச்சாவை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். அவன் செய்யும் ரகளை எல்லாம் வாயும் வயிறும் தெறிக்குமளவுக்குச் சிரிப்பு வெடி.
‘அட்லீஸ்ட் இரண்டு பக்கத்துக்கு ஒரு முறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தேன்’ என்று கார்ட்டூனிஸ்ட் மதன், கிரேஸி மோகனின் முந்தைய நூலான சிரிப்புராஜ சோழனைப் படித்துவிட்டு குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு சற்றும் குறையாமல் துவம்சம் பண்ணியிருக்கிறான் அமெரிக்காவில் கிச்சா!