இட்லியாக இருங்கள்-எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

Save 10%

Author: சோம. வள்ளியப்பன்

Pages: 380

Year: 2007

Price:
Sale priceRs. 345.00 Regular priceRs. 385.00

Description

இட்லியாக இருங்கள்

நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது? இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்! ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்.'இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: சாணக்கியன் - 09-01-10

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது. ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.

You may also like

Recently viewed