Description
சந்தேகமில்லாமல் அவரது இசை ஒரு சகாப்தம். தலைமுறை தலைமுறையாகத் தமிழர்களின் பூஜையறைக் குரலாக எம்.எஸ்.தான் இப்போதும் நின்று விளங்குபவர். சராசரி சங்கீத வித்வான்கள் எண்ணிப்பார்க்க முடியாத அங்கீகாரம் அது. திருப்பதி வேங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை உள்ளவர்கள் அதிகம். அத்தனை உயர்ந்த சங்கீதம் எங்கிருந்து பெருகும்? தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ்ப்பற்று. எம்.எஸ்ஸின் சங்கீதம் இந்த மூன்று சுனைகளிலிருந்து பெருகுவதுதான். அவர் ஒரு தனி மனுஷி அல்ல. ஓர் இசை இயக்கம். நமது கலாசார அடையாளங்களுள் ஒன்றாக ஆகிப்போனவர். 'எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், இதோ இவர் இசையிலும்' என்று கச்சேரிதோறும் ரசிகர்களை எண்ணவைத்தவரின் இந்த வாழ்க்கை வரலாறு, அவரது சங்கீதத்தைப் போலவே ஆரவாரம் துளியும் இல்லாத அமைதியை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டது. நூலாசிரியர் வீயெஸ்வி, ஆனந்த விகடன் இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழின் குறிப்பிடத்தகுந்த இசை விமரிசகர்.