ரிஸ்க் எடு தலைவா!

Save 14%

Author:

Pages: 136

Year: 2006

Price:
Sale priceRs. 120.00 Regular priceRs. 140.00

Description

செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும்.நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள்மீது திணிக்கப்படும்.அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன்என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப்போதெல்லாம்மாறவேண்டும், எப்போதெல்லாம் மாறக்கூடாது? இதுதான் பிரச்னை, இல்லையா?பிரச்னையைப் பிரச்னையாகப் பார்க்க மட்டுமே நாம் பழகிக் கொண்டிருக்கிறோம்.பிரச்னையை மட்டும் உங்கள் நெருக்கமான ஃப்ரெண்டாக மாற்றிக் கொள்ள முடிந்தால்?நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம். நிச்சயம் சாத்தியம்.சின்னச் சின்ன சுவாரசியமான கதைகள், நடைமுறைச் சம்பவங்கள் என்று மாற்றங்களை எதிர்கொள்ளும் மந்திர வித்தையை மனத்தில் பதிய வைக்கும் இந்தப் புத்தகம்உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மாற்றங்களை நாமேதேர்ந்தெடுக்கலாம். நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

You may also like

Recently viewed