Description
உலகெங்கும் இருக்கும் சீடர்களையும் அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும்வேறெந்த துறவிக்கும் இல்லாத அளவுக்கு சிஷ்யர்களைப் பெற்றிருப்பவர் மாதாஅமிர்தானந்த மயி.வெறும் ஆன்மிகச் சொற்பொழிவுகளோடு நின்றுவிடாமல் ஏராளமான அறக்கட்டளைகள் அமைத்து, கல்விப்பணியிலும் சமுதாயப் பணிகளிலும் தமது ஆன்மிக இயக்கத்தவரைஈடுபடுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிற இந்தியத் துறவி.அன்பு. இதைவிட சக்தி வாய்ந்த ஆயுதம் ஏதுமுண்டா!மில்லியன் வார்த்தைகளால் கொடுக்க முடியாத சக்தியை, ஓரிரு அன்பு வார்த்தைகள்உடனே கொடுத்துவிடும். இந்தப் புத்தகம் செய்யும் வேலையும் அதுதான். அத்தனையும்அன்பு வார்த்தைகள். உங்கள் மனத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் வைட்டமின்வார்த்தைகள்.கல்கியில் தொடராக வெளியான அமிர்தானந்த மயின் இப்படைப்புக்கு எழுத்துவடிவம்அளித்தவர், எஸ். சந்திரமௌலி. மொழி கடந்த உணர்வான அன்பை, அழகுத் தமிழில்அலங்கரித்திருக்கும் தேர்ந்த பத்திரிகையாளர்.