Description
1991-ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு, மியான்மரைச் சேர்ந்த ஆங்ஸான் சூ கீ க்கு அறிவிக்கப்பட்டபோது, அப்படி ஒரு பெயரை பெரும்பாலானோர்கேள்விப்பட்டதே இல்லை. அவர் கறுப்பா சிவப்பா என்று கூடப் பலருக்குத் தெரியவில்லை.யார் இந்த சூ கீ? கேள்விப்பட்டபோது உலகம் அதிர்ந்தே போனது. மியான்மர் அரசு சூ கீயைப்பற்றிய அத்தனை விவரங்களையும் மூடி மறைத்ததற்கான காரணமும் புரிந்து போனது.மியான்மரின் சுதந்தரத்துக்காகக் குரல் எழுப்பிய சூ கீயின் தந்தை ஆங் ஸான் படுகொலைசெய்யப்பட்டார். அதே காரணத்துக்காகப் போராடத் தொடங்கிய சூ கீயை 1989-ல்வீட்டுக்காவலில் வைத்தது மியான்மர் ராணுவம். மியான்மரை விட்டு வெளியேறச் சம்மதித்தால் அவரை விடுவித்து விடுவதாகவும் அறிவித்தது. ஆனால் இன்றைய தேதி வரைஅசைந்து கொடுக்கவில்லை சூ கீ.சுதந்தரத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாக விளங்குகிறார் சூ கீ. சமகாலச் சரித்திரம் இப்படி ஒரு புரட்சிகரமான பெண்மணியைச் சந்தித்தது கிடையாது.என். ராமகிருஷ்ணனின் இந்நூல் சூ கீ என்னும் ஆளுமை உருவான கதையையும் அவரதுபோராட்டங்களையும், அழுத்தமாகவும் எளில் மயாகவும் அறிமுகப்படுத்துகிறது. நூலாசிரியர், 'மார்க்ஸ் எனும் மனிதர்', 'ரஷ்யப் புரட்சி' உள்ளிட்ட ஐம்பது புத்தகங்களின் ஆசிரியர்.