Description
மானுட குல சரித்திரத்தை இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரிக்க முடியும். கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின்.கிறிஸ்துவின் போதனைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மாபெரும் மதம் கிறிஸ்தவம்.தேவகுமாரனாக அல்ல, தன்னை ஒரு மனிதகுமாரனாக அறிவித்துக்கொண்டவர் இயேசுநாதர். மூடநம்பிக்கைகளில் புதையுண்டுக் கிடந்த சமூகத்தைச் சீர்திருத்தினார்.ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டச் சொன்னவர் இயேசு. மனிதர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்தவர் அவர்.மனித குலத்தின் மேன்மைக்காகத் தன் உயிரை நீத்த இயேசுநாதரின் வாழ்க்கையை வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவரது போதனைகளின்படி வாழவும் பழகிக்கொள்ளவேண்டும். அதற்கு இந்நூல் உங்களுக்கு உதவும்.