Description
எத்தனையோ மாவீரர்களின் வாழ்க்கையை நாம் வாசித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் வேறுபடுகிறார் வீர சிவாஜி.வட இந்தியாவில் பிரமாண்டமான மராத்திய சாம்ராஜியத்தை நிறுவவேண்டும். எவருக்கும் கட்டுப்படாத சுதந்தர தேசம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். தீரமும் துடிதுடிப்பும் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்கவேண்டும். இதுதான் சிவாஜியின் கனவு.மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, அசத்தலாகக் காய்கள் நகர்த்தி தன் கனவை நினவாக்கினார் சிவாஜி. பாயவேண்டிய இடத்தில் பாய்ந்து, பதுங்கவேண்டிய இடத்தில் பதுங்கி, சீற வேண்டிய இடத்தில் புலிபோல் சீறினார்.வீரத்தின் சின்னமாக சத்திரபதி சிவாஜி போற்றப்படுவது ஏன் என்பதை விறுவிறுப்பான நடையில் எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.