Description
ஔரங்கசீப் மிகவும் பொல்லாதவர், தன் தந்தையையே சிறை வைத்தவர், மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது. அவரது உண்மை முகமே வேறு!தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்.இளம் வயதில் தந்தை ஷாஜஹானால் எக்காரணத்தாலோ மிகவும் புறக்கணிக்கப்பட்டவர் ஔரங்கசீப். அதுவே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே ஒரு பெரிய பிளவை உண்டாக்கிவிட்டது.தந்தையையும் சகோதரர்களையும் வென்று டெல்லி அரியணையைக் கைப்பற்றி, மாபெரும் சக்கரவர்த்தியான ஔரங்கசீப்பின் வாழ்வில்தான் எத்தனை சுவாரசியமான திருப்பங்கள்!இந்நூலைப் படித்த பின் ஔரங்கசீப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் முற்றிலும் மாறி இருக்கும் என்பது நிச்சயம்.