Description
யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்?ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்?ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா?பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?யோக நித்திரை என்றால் என்ன?யோகாசனம் மற்றும் அது தொடர்பான வேறு சில பயிற்சிகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன், பலன்கள் முழுமையாகக் கிடைக்கக்கூடிய வகையில் தவறு இல்லாமல், ஆசனம் செய்வது எப்படி என்பதையும் படங்களுடன் விளக்குகிறது இப் புத்தகம். நூலாசிரியர் டாக்டர் ர. மணிவாசகம், தன்னுடைய ஸ்ரீரமணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகாசன மையத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி அளித்துவருகிறார். பல தனியார் தொலைக்காட்சிகளில், யோகாசனம் பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கிஉள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பாக யோகா நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.