Description
பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சினிமாவின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.ஒரு சினிமா உருவாக என்னவெல்லாம் தேவை கேமரா,லென்ஸ்,ஃபிலிம்,எடிட்டிங்,டப்பிங்,இசை,கிராஃபிக்ஸ்,ஆர்ட் ஒர்க்,கதை, இயக்குனர்கள்,நடிகர்கள்,பாடல்கள் இன்னும் பல் விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு படம் உருவாகிறது.சினிமாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. சினிமா தொழில்நுட்பம் பற்றி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது இந்நூல்.