Description
சிறுவயதில் தன்னைச் சுற்றிலும் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தார். நியாயத்தை நிலைநாட்டப் போராடவேண்டும் என்னும் உத்வேகம் படேலுக்குத் தோன்றியது.nஇந்த மனோபாவம்தான், பின்னாளில் இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கு அவரை அழைத்து வந்தது.nnஇந்திய வரலாற்றில் படேல் வாழ்ந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. பிரிட்டன் உடன் போராடி சுதந்தரம் பெற்றாகிவிட்டது. ஆனால் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடன் ஒன்றுசேர மறுத்துவிட்டன. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும் முக்கியப் பொறுப்பு படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.nnமிகப் பெரிய பணி. என்ன செய்தார் படேல்? எப்படிச் சமாளித்தார்? இந்தியாவை எப்படி ஒன்றுபடுத்தினார்?nவேற்றுமையில் ஒற்றுமை பேணும் இந்தியாவைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், படேலின் வாழ்க்கையை அவசியம் நாம் வாசிக்கவேண்டும்.