மேரி க்யூரி


Author:

Pages:

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

மிகச் சிலருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வாழ்க்கை அமைகிறது. எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்?nசாதித்தே தீருவேன் என்னும் வெறி. எதிர்வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் மனோதிடம். எடுத்துக்கொண்ட பணியில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதிசய குணம். இறுதிவரை போராடும் துணிவு. இத்தனையும் மேரி க்யூரியிடம் இருந்தது. ஆகவே அவர் ஜெயித்தார்.nnஉலகிலேயே முதல் முறையாக நோபல் பரிசு பெற்ற பெண் இவர். தொடர்ச்சியாக இருமுறை நோபல் பரிசு பெற்றவரும் இவரே.nதம் கணவர் பியர் க்யூரியின் துணைகொண்டு மேரி கண்டுபிடித்த பொலேனியம், ரேடியம் என்னும் இரண்டு அதிசயப் பொருள்களும் அறிவியல் உலகின் மைல்கல்களாக இன்று கொண்டாடப்படுகின்றன.nnஃபார்முலாக்களால் நிறைந்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையைக்கூட விறுவிறுப்பாக விவரிக்க முடியும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஓர் எடுத்துக்காட்டு.n

You may also like

Recently viewed