Description
தாஜ் மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றதும் சட்டென்று நமக்கு நினைவுக்கு வரும் ஒரு சில பெயர்கள் இவை. உண்மையில், உலகம் முழுவதும் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.சுதந்தர தேவி சிலை, பீசா கோபுரம், பிரமிடு போன்றவை மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அதிசயங்கள். மற்றொருபுறம் இமயமலை, ஃப்யூஜி எரிமலை, பவளப் பாறை என்று லட்சக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இயற்கை அதிசயங்கள்.ஒவ்வோர் அதிசயத்துக்குப் பின்னாலும் சுவாரசியமான பல கதைகள். ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள். அட! என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகள்.ஆராய்ச்சியாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒருசேர வரவேற்கும் இருபத்தைந்து அதிசயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.