Description
சுதந்தரம் எங்கள் பிறப்ரிமை' என்னும் கோஷத்தை முதல் முதலில் முன்வைத்தவர் பாலகங்காதர திலகர்தான்.சிறு வயதிலேயே தவறு என்று பட்டதைத் தயங்காமல் எதிர்க்கக்கூடிய இயல்பு திலகருக்கு இருந்தது. பின்னாளில் அதுதான் வெள்ளையர்களை எதிர்த்துத் தீரமுடன் போராடுவதற்கும் வித்திட்டது.ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டுமானால் முதலில் இந்தியர்களுக்கு வலுவான கல்வியறிவு வேண்டும் என்று திலகர் நம்பினார். தாமே ஒரு பள்ளியையும் கல்லூரியையும் தொடங்கினார்.பள்ளிப்படிப்புக்கு அடுத்து? பொது அறிவு அல்லவா? ஆங்கிலத்திலும் மராத்தியிலும் பத்திரிகை ஆரம்பித்து ஆசிரியராகவும் இருந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துக் கட்டுரைகள் எழுதினார். இதற்காகப் பலமுறை சிறை சென்றார்.தமது வாழ்க்கை முழுவதையும் போராட்டத்திலேயே கழித்த திலகரின் தீரம் மிக்க துடிப்பான வாழ்க்கை வரலாறு இது.