Description
விஞ்ஞானம் இல்லாத உலகத்தை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்! பைத்தியம் பிடித்துவிடும்! உலகை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் ஒரே சக்தி விஞ்ஞானம்தான். விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ மின்சாரம் இல்லாமல் சாத்தியமா? இல்லை அல்லவா? எனவே, நவீன உலகில் அனைத்துக்கும் அடிப்படையான பரமாத்மா என்றால் அது மின்சாரம்தான். ஆகவே அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பயப்படவேண்டாம். ஷாக் அடிக்காத மொழியில் எளிமையாகவே மின்சாரத்தைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளமுடியும். மின்சாரம் என்றால் என்ன என்பது தொடங்கி மின் உற்பத்தி, மின்சார சேமிப்பு வரை அனைத்தைக் குறித்தும் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.