Description
பதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்லவேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம்.ஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தான்.அரசியல் தலைவர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என்று ஜீவாவின் ஆளுமை விதவிதமான பரிமாணங்களால் விரிவடைகிறது.அபாரமான திறமைகள் ஒரு புறம் இருக்க, பழகுவதற்கு எளிமையானவராகவும், எப்போதும் அணுகக்கூடியவராகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் ஜீவா இன்று நினைவு கூரப்படுகிறார்.'இந்தியாவின் சொத்து' என்று ஜீவாவை உச்சி முகர்ந்து பாராட்டினார் காந்தி. ஜீவாவைத் தவிர வேறு யாரை இப்படி அழைக்கமுடியும்?