Description
எத்தனை பெரிய தத்துவமாக இருந்தாலும் அதை ஒரு சிறிய பொட்டலத்தில் கட்டி இனிப்பு தடவி அளித்துவிடுவார் பரமஹம்சர். எளிய கதைகளே அவருடைய ஆயுதம். அதில் விழாத இதயங்களே இருக்கமுடியாது.சராசரி குழந்தையாகவே பிறந்து வளர்ந்த ராமகிருஷ்ணர், பரமஹம்சரானது எப்படி? எது அவரை இறைவனுக்குப் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது? எதனால் அவர் காலம் கடந்தும் நினைக்கப்படுகிறார்?இடைவிடாது அவர் மேற்கொண்ட தியானமா? தன்னை வருத்திக்கொண்டு அவர் புரிந்த பக்தி யோகமா? தேன் சொட்டும் அவரது உபதேசங்களா? தத்துவங்களை விளக்க அவர் பயன்படுத்திய குட்டிக் குட்டி கற்கண்டுக் கதைகளா?ராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப் படியுங்கள். படித்து முடித்த கணத்தில் உங்கள் உள்ளத்தில் ஒரு புத்தொளி பிறக்கும். மகத்தான செயல்களைப் புரியும் உத்வேகம் உண்டாகும்.