Description
மனித உடலில் மிக முக்கியமானது ஜீரணமண்டலம். உங்கள் உயரத்தில் ஏழில் ஒரு பங்கு உயரம் ஜீரணமண்டலத்தைச் சேர்ந்தது. ஜீரணமண்டலத்தில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் உணவை அரைப்பது, சக்தியைப் பிரிப்பது, கழிவை வெளியேற்றுவது போன்ற வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன.வயிற்று வலி, விக்கல், வாந்தி, ஏப்பம், அல்சர், மஞ்சள் காமாலை, அப்பெண்டி-சைட்டிஸ் என பிரபலமான நோய்கள் எல்லாம் ஜீரணமண்டலத்தில் இருந்துதான் உருவாகின்றன என்பது தெரியுமா?என்ன ஆனாலும் உங்கள் வயிறு! உள்ளே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியவேண்டாமா? சொல்லித்தருகிறது இந்நூல்.