Description
அவரவர் எடையில் சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட மூளை செய்யும் செயல்களை மருத்துவ உலகத்தால் இன்னும் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இதுவரை கண்டறிந்த தகவல்களே ஏராளம்.மூளை எப்படி உடலின் பிற உறுப்புகளுக்குக் கட்டளை இடுகிறது? வெளியில் இருந்து வரும் தகவல்களை எப்படி வாங்கிக்கொள்கிறது? என்றோ நடந்த செயல்களை எப்படி நினைவில் கொள்கிறது? நாம் தூங்கும்போது மூளை என்ன செய்துகொண்டிருக்கும்? மூளையில் என்னென்ன பாகங்கள் உள்ளன? புத்திசாலியாக இருக்க என்ன செய்யவேண்டும்?இப்படி மூளையைப் பற்றி எழும் எல்லாக் கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் சுவாரசியமான விளக்கங்கள் உள்ளன.