Description
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா?ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரியவேண்டும். ஒவ்வொருவரிடம் ஒவ்வொருமாதிரி பழகவேண்டியிருக்கும். அளந்து பேசுவது, அழுத்தம் கொடுத்துப் பேசுவது, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் உணர்ச்சி, கொஞ்சம் வேகம், கொஞ்சம் விவேகம் என்று கலந்துபேசுவது எல்லாமே முக்கியம்.இதெல்லாம் இளம் வயதிலேயே கைவந்துவிடவேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.