Description
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல்.மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை?பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்டை, அண்டை வீட்டாருடன் சண்டை, வீதியில் சண்டை, பொது இடத்தில் சண்டை, முட்டல் மோதல்கள் அனைத்தையும் தீர்த்து விடலாம். உங்களைச் சுற்றி என்றென்றும் அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.