Description
அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அற்புத தேவதை செயற்கைக்கோள். எப்போது மழை பெய்யும்? எப்போது வெயில் அடிக்கும்? கடலில் எங்கே மீன்கள் அதிகம் இருக்கும்? உட்கார்ந்த இடத்தில் நூறு சானல்களைப் பார்க்க முடிவது எப்படி? செயற்கைக் கோள் இல்லாத ஓர் உலகை இனி கற்பனை செய்வது கடினம்.செயற்கைக்கோள் எப்படி இயங்குகிறது? எப்படிச் செய்திகளை அனுப்புகிறது? எங்கே, எப்படி உலாவுகிறது? விண்வெளி அதிசயங்களை அறிந்துகொள்வோம். செயற்கைக் கோளில் இருந்து தொடங்குவோம்.