Description
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன?ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது?யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது?யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமான அம்சங்கள் என்னென்ன?யோகாவின் மூலம் இறைநிலையை உணர முடியுமா?இத்தகைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிப்பதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட ஆசனங்களையும் அவற்றுக்கான பலன்களையும் எளிமையாக, சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். நூல் ஆசிரியர் கணபதி ராமகிருஷ்ணன், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கர்னாடக இசையில் ஈடுபாடு உள்ள இவர், ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பத்திரிகைகளில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுதி வருகிறார். தற்போது சென்னையில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் இவருக்கு வயது 58.