Description
ரத்தம் என்ற உடனே பயப்படத் தேவை இல்லை. நம் உடலுக்குள் நடைபெறும் பல்வேறு அதிசயங்களை இயக்கிக் கொண்டு இருக்கும் ஜீவ சக்தி, ரத்தம்.எல்லோர் உடலிலும் ஒரே ரத்தம். எல்லா ரத்தமும் ஒரே நிறம். எனில், ஏன் இத்தனை பிரிவுகள்? வெள்ளை அணு, சிவப்பு அணு என்றெல்லாம் சொல்கிறார்களே, அவை என்ன செய்கின்றன?மிருகங்களின் உடலில் ஓடும் ரத்தமும் நம் உடலில் ஓடும் ரத்தமும் வெவ்வேறா? ரத்த தானம் செய்தால் ரத்தம் குறைந்துவிடுமா? யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தம் அளிக்கலாமா? எப்படி உருவாகிறது ரத்தம்?ரத்தத்தைப் பற்றிய அத்தனை தகவல்களையும் அளித்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது இந்தப் புத்தகம்.

