Description
டென்ஷனில்லாமல் செய்கிற வேலை நமக்குத் திருப்தியைக் கொடுக்கும். பாராட்டைப் பெற்றுத்தரும். காலையில் பள்ளிக்குக் கிளம்புவதிலிருந்து, வீடு திரும்பும்வரை மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பிரச்னைகள் மாணவர்களைப் பதற்றம் கொள்ள வைக்கின்றன. கோபத்தின் பக்கம் விரட்டியடிக்கின்றன. இவற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் இயல்பு நிலையை மறந்துபோகிறார்கள். பிறகு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். யோசிக்கும் திறன் குறைகிறது.பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றின் பிடியில் அகப்படாமல் தப்பிப்பது எப்படி? இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.