Description
சகல வசதிகள் கொண்ட பெரிய கப்பல்கள் எல்லாம் இல்லாத பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். பாய்மரக் கப்பல்கள்தான். கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படையோ எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கப்பலைச் சீரழிக்கக் காத்துக் கொண்டிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலப்பரப்பே தெரியாமல், மாதக் கணக்கில் நீண்டு கொண்டே செல்லும் பயணம். உணவோ, நீரோ கிடைக்காத அவலநிலையால் மரணம் சகஜம். இம்மாதிரியான சூழலில்தான் பயணி மெகல்லன், கடல் வழியாக உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். ஐந்து கப்பல்கள். 241 பேர். 69,800 கி.மீ. பயண தூரம். மூன்று வருடப் பயணம். எத்தனை பேர் பிழைத்து வந்தார்கள்? உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் மெகல்லன் என்பது உண்மைதானா?அதிரடியான பயண வரலாறு.