Description
மிகப் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மெசபோடோமிய நாகரிகத்துக்குச் சற்றும் குறையாதது இந்த நாகரிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கழிவறை வசதி, துணி துவைக்கும் வசதி இருந்தது.ஓவியம், சிற்பக் கலை செழித்திருந்திருக்கிறது. மண் பாத்திரங்களைப் பயன்படுத்தியிருக்-கிறார்-கள். உழவுக்கு ஏரைப் பயன்படுத்தியிருக்-கிறார்-கள். இருப்பிடம் கட்ட செங்கற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படித் தோண்டத் தோண்ட அதிசயங்களாக வந்து கொட்டியபடி இருக்கின்றன.பல ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தைப் பற்றி, அந்த சமூகத்தில் வாழ்ந்த அடித்தட்டு மக்களிலிருந்து மேலிடத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறை வரை தெளிவாக அலசுகிறது இந்நூல்.