Description
ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். ஒவ்வொரு யூதருடனும் கடவுள் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். ஒவ்வொரு யூதரின் பிரார்த்தனைகளையும் அவர் கேட்கிறார். தேவைப்பட்டால் பேசுகிறார். ஒட்டுமொத்த யூத குலத்தின் அடிப்படை நம்பிக்-கையே இதுதான்.ஆபத்துக் காலங்களில் தேவதூதர்கள் தோன்றி, தம்மை வழிநடத்திச் செல்வார்கள் என்பதும் அவர்களது நிரந்தர நம்பிக்கை. அதன்படிதான் இன்றுவரை ஒவ்வொரு யூதரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கைமுறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமான மொழியில் விவரிக்கிறது.