Description
நிலாவைப் பற்றி உங்களுக்கு என்னென்ன கேள்விகள் எழும்?1. நிலா எப்படித் தோன்றியது? சூரியனுக்கு பதில் நிலாவே நிரந்தரமாக இருந்துவிட்டால் என்ன? சூரியனால் நிலா ஒளிர்கிறது என்கிறார்களே, எப்படி?2 பூமியிலிருந்து நிலா எத்தனை தூரத்தில் இருக்கிறது? நிலாவில் என்னவெல்லாம் இருக்கிறது அல்லது எதுவெல்லாம் இல்லை? மிக முக்கியமாக நிலாவில் தண்ணீர் இருக்கிறதா?3 நீலநிலா என்று ஒன்று உண்டாமே, அப்படியென்றால் என்ன? சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது? கடலில் அலைகள் தோன்றுவதற்கு எப்படி நிலா காரணமாகிறது?4இதுவரை, நிலாவுக்கு யாரெல்லாம் பயணம் போயிருக்கிறார்கள்? அவர்கள் நிலாவில் சென்று இறங்கி என்ன செய்தார்கள்? என்ன கண்டுபிடித்தார்கள்?எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டு இந்தப் புத்தகத்தில்.