Description
எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு.மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் பதப்படுத்தும் கலையை எகிப்தி-யர்கள் எப்படிக் கற்றார்கள்?அதிநவீன அறிவியல், தொழில்நுட்பம் எதுவுமே ப்ரமிடின் நிழலைக்கூடத் தொடமுடியாமல் இருப்பது எப்படி?நாகரிகத்தின் தலைநகரமாக எகிப்து விளங்குவது எப்படி? பண்டைய எகிப்தியர்களின் வாழ்க்கை முறையிலும் கலாசாரத்திலும் பண்பாட்டிலும் இத்தனை வியப்பூட்டும் சங்கதிகளா? கிளியோபாட்ராவின் கதை என்ன?எகிப்திய நாகரிகம் கண்டுபிடித்து அளித்த காகிதத்தில்தான் இன்று நாம் சரித்திரத்தை எழுதி வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறோம்!