Description
கிட்டத்தட்ட உலகை ஆண்டிருக்கிறார்கள் மாயன்கள். வானியல் ஆராய்ச்சிகள் செய்தார்கள். கணிதத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசியிருக்கிறார்கள். சாக்லேட் கண்டுபிடித்தார்கள். தமக்கென்று ஒரு பாதை. தமக்கென்று ஒரு திட்டவட்டமான வாழ்க்கை முறை. உலகில் உள்ள யாரைப் போலவும் இல்லை அவர்கள்.அதனாலேயே அவர்கள் தாக்கப்பட்டார்கள். சிறிது சிறிதாக அழிக்கப்பட்டார்கள். மத்திய அமெரிக்காவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்து, அழிந்த மாயன்களின் அதிசய உலகம் பற்றி நாம் தெரிந்து கொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். ஆனால் அதற்குள் அவர்கள் காணாமல் போயிருந்தார்கள். எஞ்சியிருப்பவை அடையாளங்கள் மட்டுமே. பிரமிப்பில் ஆழ்த்தக்கூடிய அந்த அடையாளங்கள் அனைத்தையும் சேகரித்து அளிக்கிறது இந்நூல்.