Description
ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா. ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது. அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை. இதுதான் விதி. லெனினின் வருகைக்குப் பின்னால், ரஷ்யா மாற ஆரம்பித்தது. மிகத் தெளிவான ஒரு சித்தாந்தமும் அந்தச் சிந்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டமும் லெனினிடம் இருந்தன. ரஷ்ய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் ரஷ்யப் புரட்சி ஒரு மைல்கல். சாமானிய மக்கள் வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய முதல் புரட்சி அது. புரட்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் துல்லியமாக விவரிக்கிறது இந்நூல்.