Description
ஒலிம்பிக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது மாரத்தான். விளையாட்டுப் போட்டியாக அல்ல, ஒரு நாட்டைக் காக்கும் போராட்ட ஓட்டமாக, அந்தப் புள்ளியில் தொடங்குகிறது ஒலிம்பிக்கின் அற்புதமான வரலாறு.எப்போது ஆரம்பமானது இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி? எத்தனை விதமான விளையாட்டுகளை இதில் விளையாடப்படு-கின்றன? எத்தனை வகை ஒலிம்பிக்குகள் இருக்கின்றன? இதுவரை ஒலிம்பிக் போட்டி-களில் அதிக பதக்கங்களைக் குவித்த நாடு எது? மயிர்க் கூச்சரியச் செய்யும் சாதனைகளை அசாத்தியமாக நிகழ்த்தியுள்ள வீரர்கள் யார் யார்?கார் ரேஸ் போல தேர் ரேஸ் எல்லாம் இருந்த ஆதிகால ஒலிம்பிக் முதல் சகல நவீன வசதிகளுடன் நடத்தப்படும் தற்கால ஒலிம்பிக் வரையிலான அனைத்து விஷயங்களையும் அழகாகத் தொகுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.