Description
தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை. முக்கியமாக நேர்மை. தளபதிக்குரிய இந்த குணங்களே ராஜேந்திர பிரசாத்தின் அடையாளங்கள். மாணவர் தலைவராக இருந்தவரை குடியரசுத் தலைவர் அளவுக்கு உயர்த்தியது இந்த குணங்கள்தான்.வழக்கறிஞர் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பத்துக்கு சிரமம் என்று தெரிந்தும் தைரியமாக சுதந்தரப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நொடிக்கொரு போராட்டம். நிமிடத்துக்கொரு ஆர்ப்பாட்டம். இளமை முழுக்க கோஷமிட்டே கழிந்தது.பூகம்பம் என்றாலும் சரி, போராட்டம் என்றாலும் சரி, களத்துக்கு வா என்றால் அடுத்த கணம் களப்பணியில் இருப்பார். அந்த ஆற்றல்தான் காந்தியைக் கவர்ந்தது. அதுதான் அவருடைய தளபதியாகவும் உருமாற்றியது.சுதந்தர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தின் எளிமையான வாழ்க்கை வரலாறு.