Description
மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான்.விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதில் தெளிவாக இருந்தார் கஃபார் கான். ஆதரவற்று நிற்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஒன்றுபட்ட சுதந்தர இந்தியா உருவாகவேண்டும்.முதலில் ஆங்கிலேயர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும். இவர் தேர்ந்தெடுத்தது அகிம்சை என்னும் வலிமையான ஆயுதத்தை. விளைவு? இந்தியச் சிறைகளில் பன்னிரண்டு ஆண்டுகளும் பாகிஸ்தானில் பதினைந்து ஆண்டுகளும் அடைக்கப்பட்டார்.எல்லை காந்தி என்று எல்லோராலும் அன்புடனும் மரியாதையுடனும் கொண்டாடப்படும் மகத்தான தலைவரின் வாழ்க்கை இது.